சர்வதேச சிறுவர் தினத்தையிட்டு நீர்கொழும்பில் கவனயீரப்;புப் பேரணி இன்று
வியாழக்கிழமை முற்பகல் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
சிறுவர் பாலியல் வன்முறைகளை இல்லாதொழித்தல் பெண்களுக்கு எதிரான வன்முறை
மற்றும் மது ஒழிப்பு தொடர்பாக இந்த கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவப் பெண்கள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. பேரணியில் சென்றவர்கள் பல்வேறு
வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
முற்பகல் 10 மணிக்கு முகாந்திரம்
விளையாட்டரங்கில் பேரணி ஆரம்பமானது.
பின்னர் நகரின் பிரதான வீதியினூடாகச்
சென்ற பேரணி நீர்கொழும்பு பொலிஸ்
நிலையத்தை வந்தடைந்தது. பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் மகளிர்
பிறிவிற்கு சென்ற பேரணியில் ஈடுபட்ட முக்கியஸ்த்தர்கள் அங்கு மகஜர் ஒன்றை கையளித்தனர். பின்னர்
நீர்கொழும்பு பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளரின் பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.














No comments:
Post a Comment