Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, November 27, 2015

கட்டானை கந்தவலை பிரதேசத்தில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட  200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட  60 அடி உயரமான இந்த கோபுரம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவி;ல்லை.
இதேவேளைகோபுரம் அமைந்துள்ள  பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதன் காரணமாக கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக
குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. கோபுரம் உடைந்து வீழ்ந்ததன் காரணமாக அருகிலிருந்த தாய், சேய்  மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு செதம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக  தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த கோபுரம்புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளதாக எமக்கு தெரிய வருகிறது என்றார்.







இதேவேளை உடைந்து வீழ்ந்துள்ள கோபுரத்தை பார்க்க பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் அங்கு வருவதை காணக்கூடியதாக இருந்தது.


- எம்.இஸட்.ஷாஜஹான்


No comments:

Post a Comment