நான் நீர்கொழும்பு மேயராக பதவியேற்று நான்கு வருட
காலமாகிறது. இன்னும் சிறிது காலத்தில் மாநகர சபையின் ஆட்சி காலம் முடிவடையப்போகிறது.
அரசியல் பதவிகள் தற்காலிகமானது. மனித நேயமே நிரந்தரமானது என்று நீர்கொழும்பு மேயர்
அன்ரனி ஜயவீர கூறினார்.
நீர்கொழும்பு
பிரதி மேயராக தயான் லான்ஸா நேற்று செவ்வாய்க்கிழமை (24-11-2015) சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா தலைமையில்
நடைபெற்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன, மேல்
மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா, மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா, மாநகர
சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள், சர்வ மதத் தலைவர்கள், கலைஞர்கள், கட்சி ஆதரவாளர்கள்
உட்பட பெரும் எண்ணிக்கையானோர் பதவியேற்பு நிகழ்வில்
கலந்து கொண்டனர்.
நிகழ்வில்
மேயர் அன்ரனி ஜயவீர தொடர்ந்து உரையாற்றுகையில்
கூறியதாவது,
பதவிகள்
இறைவனுடைய நாட்டம் மற்றும் அதிஸ்டத்தின் அடிப்படையில் கிடைப்பதாகும். அரசியல்வாதிகள்
மனித நேயத்தை பேண வேண்டும். என்னையும் பிரதி மேயர் தயான் லான்ஸாவையும் வீழ்த்த சதித்திட்டம்
தீட்டப்பட்டு வருகிறது. தயான் லான்ஸா அவரது சகோதரரான மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸாவை
பின்பற்ற வேண்டும். நிமல்லான்ஸா தனக்கெதிராக
எழுந்த தடைகளை அமைதியான முறையில் வெற்றிகொண்டவர்.
No comments:
Post a Comment