நீர்கொழும்பு
பிரதி மேயராக தயான் லான்ஸா செவ்வாய்க்கிழமை
(24-11-2015) சத்தியப்பிரமாணம் செய்து
பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதி
அமைச்சர் நிமல் லான்ஸா தலைமையில் நடைபெற்றது.
நீர்கொழும்பு
பிரதி மேயராக இருந்த எம்.எஸ்.எம். சகாவுல்லா மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவானதை
அடுத்து, மாநகர சபை உறுப்பினர் தயான் லான்ஸா
அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில்
முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன,லா மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.
சகாவுல்லா, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மாநகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள்,
சர்வ மதத் தலைவர்கள், கலைஞர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து
கொண்டனர்.
மாநகர
சபை உறுப்பினர் தயான் லான்ஸா அவரது சகோதரரும் பிரதி அமைச்சருமான நிமல் லான்ஸா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள்
சிலரின் உரைகள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment