துவிச்சக்கர
வண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இன்று
சனிக்கிழமை (14-11-2015) காலை
நீர்கொழும்பில் சைக்கிள் சவாரி ஒன்று நடத்தப்பட்டது.
பெரகன் பெட்லஸ் சைக்கிள் கழகம் ஏற்பாடு செய்திருந்த சைக்கிள் சவாரியின் ஆரம்ப
நிகழ்வு நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
தொழில் பயிற்சி
பிரிதி அமைச்சர் பாலித்த ரங்க பண்டார இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
சைக்கிள் சவாரியை ஆரம்பித்து வைத்தார்.
நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர், மாநகர சபை உறுப்பினர் ரெமோனா லான்ஸா, இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் தலைவர் வைத்தியர் அமால் ஹர்ச சில்வா,
இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின்
உப
தலைவர்களான நிஹால் குலசேகர, வில்மன் பெரேரா, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள்
உட்பட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு நகரையும் அண்டிய பிரதேசங்களையும்
சுற்றியதாக 15 கிலோமீற்றர் தூரத்திற்கு சைக்கிள் சவாரி நடைப்பெற்றது.
இதில் சைக்கிளோட்ட வீரர்கள், அரச மற்றும் தனியார்
நிறுவனங்களில் பணியாற்றும்
உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், போக்குவரத்து பொலிஸார் சைக்கிள் சவாரியை விரும்புவோர் என
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment