நீர்கொழும்பு
மாநகர சபையின் பிரதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா கடந்த திங்கட்கிழமை
(16-11-2015) மேல் மாகாண சபையின் தலைவர் (Chairman)
சுனில் விஜேரத்ன முன்னிலையில் மேல் மாகாண சபை
உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் ரூபசிங்க அண்மையில்
காலமானதை அடுத்து அவரின் இடத்திற்கு எம்.எஸ்.எம்.
சகாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 21 ஆயிரத்தத 579 விருப்பு வாக்குகள்
பெற்றார்.
மேல்
மாகாண சபையின் தலைவர் முன்னிலையில் எம்.எஸ்.எம்.
சகாவுல்லா சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதையும்,
இதன்போது முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.
பௌசி மற்றும் மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா
ஆகியோர் அருகில் நிற்பதை படங்களில் காணலாம்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment