நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டனர்.
சட்டத்தரணிகள்
சிலரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட்
பூர்ணிமா பரனகமகே தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று
வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு செய்தனர். இதன் காரணமாக வழக்குகளுக்கு வந்த பொது
மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இச்சம்பவம்
தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நேற்று
வியாழக்கிழமை (26) நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட்
பூர்ணிமா பரனகமகே வழக்கு விசாரணை ஒன்றின் போது
திறந்த நீதிமன்றில் வைத்து, சட்டத்தரணிகளின் முறையற்ற
செயற்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிட்டு,
இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி
ஏற்படுவதாகவும்,
தனக்கெதிராக சிலர் 'பெட்டிசன்' எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்சினையை
தீர்ப்பதற்கு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டாரவிடம் சட்டத்தரணிகள் முறையிட்டு
பிரதான நீதவானுடன் இது தொடர்பாக பேசுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆயினும் பிரதான
நீதவான் இதனை புறக்கணித்ததாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து
இன்று வெள்ளிக்கிழமை மஜிஸ்ட்ரேட்
நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் வழக்குகளுக்கு
ஆஜராகவில்லை. ஆயினும் முதலாம் இலக்கம், இரண்டாம் இலக்கம்
ஆகிய மன்றுக்களில்; நீதவான்கள் வழக்கு விசாரணைகளை
நடத்தினர்.
இதேவேளை,
சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளுக்காக
ஆஜராகாததை அடுத்து வழக்குகளுக்கு வந்த பொது மக்களும் விசாரணை கைதிகளும்
ஏமாற்றமடைந்தனர். அத்துடன் மன்றில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment