நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார
நிலையம் சுற்றிவளைப்பு செய்யப்பட்டு மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு
தில்லன்தூவ சந்தியில் இரண்டு மாடிக்கட்டிடமொன்றில் இந்த விபசார நிலையம் இயங்கி வந்துள்ளது. நீர்கொழும்பு
பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு அங்கிருந்த ஐந்து பேரை கைது செய்துள்ளனர்
.இவர்களில் மூவர் பெண்களாவர். இருவர் ஆண்களாவர்.
இதேவேளை,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் பொலிஸார் வியாழக்கிழமை (17-12-2015) நீர்கொழும்பு
மேலதிக நீதவான் திலக்கரத்ன
பண்டார முன்னிலையில்
ஆஜர் செய்தனர். நீதவான் சந்தேக நபர்களுக்கு
தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். இதற்கு மேலதிகமாக 15 வருட காலம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால கடூழிய
சிறைத் தண்டனையையும் நீதவான் சந்தேக நபர்களுக்கு விதித்தார்.
No comments:
Post a Comment