Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, December 15, 2015

நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

 நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியர் சிறிஜயந்த விக்ரமரத்னவுக்கு  மரண அச்சுறுத்தல் விடுத்து அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலக்கரத்ன பண்டார  ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய  உத்தரவிட்டார்.
கட்டானை, ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த  ஜனிந்த பெர்னாந்து புள்ளே என்பவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபர் வெளிநாடொன்றில் பணிபுரிபவராவார்.  இவர் தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக தாய் நாட்டுக்கு வந்துள்ளார் .  மரண சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரியை சந்தித்தபோது சந்தேக நபருக்கும்
மரண விசாரணை அதிகாரிக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது சந்தேக நபர் மரண விசாரணை அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு அவரது அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment