சர்வதேச
மனித உரிமை தினமான நேற்று வியாழக்கிழமை ஊடக சுதந்திரம் தொடர்பான செயற்பாட்டுக்குழுவின்
முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
ருவன் குனசேகரவிடம் இலங்கையில்
காணாமல் போன ஊடகவியலாளர்கள், கொலை செய்யப்பட்ட
ஊடகவியலாளர்கள்,
தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் 44
பேரின் பெயர்ப் பட்டியல் அடங்கிய கடிதம் ஒன்றை கையளித்தனர்.
பொலிஸ்
மா அதிபரிடம் கையளிப்பதற்காகவே இந்த கடிதம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு வழங்;கப்பட்டது.
இந்நிகழ்வு
பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களையும்
சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
இந்த
சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் தமது பிரதேசங்களில் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக
எடுத்துக் கூறினர். வடக்கு,கிழக்கு பகுதிகளில் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும்
பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள்
தொடர்பாக அடுத்த வருட ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் விசேட சந்திப்புக்களை
ஏற்படுத்துவதாகவும் அதற்கு ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அங்கு
தெரிவித்தார்.
No comments:
Post a Comment