இலங்கை வங்கியின் சுதந்திர வர்த்தக வலய கட்டுநாயக்க கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) முற்பகல் ஏற்பட்ட
தீ விபத்தில் வங்கியில் இருந்த ஆவணங்கள் அலுவலக உபகரணங்கள் மற்றும்; உபகரணங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
இச்சம்பவம்
நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக வங்கியின் முகாமையாளர் திருமதி சொர்ணகாந்தி தெரிவிக்கையில்
வங்கி வாடிக்கையாளர்களின்
பணத்திற்கோ அல்லது அடகு வைத்த நகைகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவி;ல்லை. காரணம் அவை
பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை தினம் என்பதால் எந்தவொரு ஊழியருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றார்
வங்கியின்
கூரையில் புகை எழும்பிய போது அதுதொடர்பாக 119 அவசர இலக்கத்திற்கு அறிவித்தபோதும்
பதில் ஏதும் கிடைக்காததன் காரணமாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாக சம்பவத்தை
நேரில் கண்ட சிலர் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க
எவரிவத்தை தீயணைப்பு படைப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
No comments:
Post a Comment