நீர்கொழும்பு
நகரில் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்; சுகாதாரத்;தைப் பேண நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களில் அதன் உரிமையாளர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று
நீர்கொழும்பு பிரதி மேயர் தயான் லான்ஸா தெரிவித்தார்.
உணவு
பாதுகாப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பு மாநகர
சபை பிரிவிற்குட்பட்ட பேக்கரி உரிமையாளர்கள் உணவக உரிமையாளர்கள் மத்தியில்
உரையாற்றும் போதே பிரதி மேயர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு
இன்று புதன்கிழமை (9) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபையில் நடைபெற்றது.
நீர்கொழும்பு மாநகர சபை ஆணையாளர் சுதத்
குமார, உதவி ஆணையாளர் ரோணி பெர்னாந்து, சுகாதார வைத்திய உத்தியோகத்தர் லலித் இந்திக, பிரதான பொது சுகாதார
பரிசோதகர் பி.இ.ஜி, சோமசிறி, பொது சுகாதார
பரிசோதகர்களான குணரத்ன, லக்ஷ்மன் வசந்த
ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment