நீர்கொழும்பு
உதைப்பந்தாட்ட சங்கத்தின் தெரிவு சட்ட ரீதியாக இடம்பெறுவதில்லை. சங்கத்திற்கான உறுப்பினர்கள்
தெரிவு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தேர்தல் இடம்பெற
வேண்டும் ஆயினும், முன்னரே தீர்மானிக்கப்பட்படி
பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறுகிறது என்று நீர்கொழும்பு உதைப்பந்தாட்ட
சங்கத்தின் உப தலைவரும் நீர்கொழும்பு மாநகர
சபை உறுப்பினருமான நந்த சுலோச்சன பெரேரா தெரிவித்தார்.
நீர்கொழும்பு பெரடைஸ் பீச் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டின் போது விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை
இடம்பெற்றது.
மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா,
அருட் தந்தை ஹியுமன் பின்து, முன்னாள் உதைப்பந்தாட்ட
வீரரும் தேசிய பயிற்றுவிவிப்பாளருமான நவவாவி பிரின்ஸ் ஆகியோர்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில்
விளக்கமளித்தனர்.
நீர்கொழும்பு
உதைப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவர் பி. நந்த
சுலோச்சன பெரேரா அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,
நீர்கொழும்பு உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ மற்றும் சங்கத்தின்
செயலாளர் ஆகியோர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றனர். சங்கத்தின் தெரிவு சட்ட ரீதியாக
இடம்பெறுவதில்லை. கடந்த 14 வருட காலமாக சட்ட ரீதியாக தெரிவுகள் இடம்பெறவில்லை. சங்கத்திற்கான
உறுப்பினர் தெரிவுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதில்லை.
முன்னரே தீர்மானிக்கப்பட்படி பதவிகளுக்கான
உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். விண்ணப்பங்கள் கோரப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு
பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவுகள் இடம்பெற வேண்டும் ஆயினும், அவ்வாறு நடைபெறுவதில்லை.
நீர்கொழும்பு உதைப்பந்தாட்ட சங்கத்தில் 16 கழகங்கள் அங்கத்துவம் வகிப்பதாக கூறப்பட்டாலும்
உண்மையில் மூன்று கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களே அந்த சங்கத்தில் பதவிகள் வகிக்கின்றனர்.
நீர்கொழும்பு நகரின் பிரபல கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நீர்கொழும்பு உதைப்பந்தாட்ட சங்கத்தில் இல்லை.
நீர்கொழும்பு
உதைப்பந்தாட்ட சங்கத்தில் 'மாபியா' சக்தி ஒன்று நிலவுகிறது. அந்த சக்தி அழித்தொழிக்கபட
வேண்டும். இல்லையேல் நீர்கொழும்பில் உதைப்பந்தாட்டத்துறை வீழ்ச்சி அடையும். நீர்கொழும்பு
உதைப்பந்தாட்ட லீக்கிற்கான தெரிவுகள் இந்த வருட இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
புதிய தெரிவுகள் தலைவருடைய இல்லத்தில் அல்லாமல் பிரிதொரு இடத்தில் நடத்தப்பட யாப்புக்கு இணங்க சட்ட ரீதியாக நடத்தப்பட வேண்டும்.
வாக்களிப்பு இரகசியமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின்
பிரதிநிதி ஒருவரும், இலங்கை உதைப்பந்தாட்ட
சங்கத்தின் அவதானி ஒருவரும் சமூகமளித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக விளையாட்டுத்துறை
அமைச்சருக்கு எழுத்து மூலாமாக அறிவித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment