பௌத்தமத
சமய வழிபாடுகளுக்காக 40 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த
கார் மீது மோதியதில் காரில் பயணித்த மூவர்
காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (6) மாலை கட்டுநாயக்க,
குரணை பிரதேசத்தில் சிசில் லேன் அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்து காரணமாக அருகிலிருந்த
கடையொன்றின் முன் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் காரின் முன் பகுதியும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு, கொலன்னாவை பகுதியிலிருந்து ஆனமடுவயில்
அமைந்துள்ள வடத்த விகாரைக்கு பௌத்த சமய வழிபாடுகளுக்காக பஸ் ஒன்றில் 40 பேர் பயணித்துள்ளனர். கட்டுநாயக்க, குரணை பிரதேசத்தில் வைத்து வேகமாக
பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி வீதிக்கு
அப்புறமாக சென்று எதிரே வந்த கார் மீது மோதி
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான கார் கொழும்பு திசையை நோக்கி சென்று
கொண்டிருந்துள்ளது. அந்த காரில் பயணித்துக்
கொண்டிருந்தவர்கள் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுகொண்டிருந்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து பஸ் சாரதி தப்பியோடியுள்ளார்
பின்னர் சீதுவை பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment