கம்பஹா
மாவட்ட 'தேசிய தைப்பொங்கல் விழா'; நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்
எதிர்வரும் 22.01.2016 வெள்ளிக்கிழமை காலை
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் ரனில் விக்ரமசிங்க
, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள் , பிரதி
அமைச்சர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில்
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள 12 பாடசாலைகளில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் 52 மாணவர்கள்
, ஆசிரியர்கள், பெற்றார் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சர்வமத
தலைவர்கள் பிரதேச கல்விமான்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாக
கல்லூரி அதிபர் என்.புவனேஸ்வரராஜா தெரிவித்தார்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment