Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 19, 2016

ராகமை பட்டுவத்தை வித்தியாலய அதிபரை இடமாற்றம்; செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

 நீர்கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ராகமை பட்டுவத்தை வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலையின் பெற்றோர்கள் நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் முன்பாக  இன்று செவ்வாய்க்கிழமை  (19) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை அதிபர் தமயந்தி சேரம் என்பவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அதிபரின் நிருவாகத்தில் காணப்படும் குறைபாடுகள், மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சி, நிதி மோசடி என்பவைகள் காரணமாக பாடசாலை அதிபரை இடமாற்றல் செய்யுமாறு இன்று காலை பாடசாலை முன்பாக பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினையை தீர்ப்பதற்காக நீர்கொழும்பு கல்வி வலய அதிகாரிகளை பெற்றோர்கள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருமாறு கோரிய போதிலும் அதிகாரிகள் வருகை தராததன் காரணமாக பின்னர்  வலய கல்வி  அலுவலகத்தின் முன்பாக  வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டடைகளையும் அவர்கள் ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பினர்.
இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த அதிபர் தொடர்பாக வலய கல்வி அதிகாரிகளுக்கு இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தோம், ஆனால் அதிபரை இடமாற்றம் செய்யவில்லை. அதிபரின் ஆளுமையற்ற நிருவாகம் காரணமாக பாடசாலை மாணவர்களிடத்தில் ஒழுக்கக் குறைபாடுகள் காணப்படுகின்றன. மாணவர்களில்  சிலர் சிகரட் புகைத்தல், கசிப்பு அருந்துதல்  உட்பட பல்வேறு தீய செயல்களை புரிகின்றனர். அதிபர் முறையற்ற விதத்தில் பெற்றோர்களிடமிருந்து பணம் சேகரித்துள்ளார். மாணவன் ஒருவன் போத்தல் ஒன்றில் சிறு நீர் கழித்து அதனை மாணவர் ஒருவருக்கு  பலவந்தமாக அருந்த முயற்சி செய்துள்ளமை மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன்  பாடசாலையில்  மூன்றாம் மாடியில் அமைந்துள்ள வகுப்புகளுக்கு சில ஆசிரியர்கள் கற்பிக்கச் செல்வதில்லை.. அதிபருக்கு எதிராக குரல் எழுப்பும் பெற்றோர்களை அதிபர் பலிவாங்குகிறார் எனத் தெரிவி;த்தனர்.

ஆர்ப்பாட்டத்தை அடுத்து  நீர்கொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  அன்ரனி பெர்னாந்துவின் அலுவலகத்தில் பெற்றோர் பிரதிநிதிகள்  சிலருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. குறித்த அதிபரை நாளைய தினம் முதல் பட்டுவத்தை வித்தியாலயத்திற்கு கடைமைக்காக அனுப்புவதில்லை என வலயக் கல்விப் பணிப்பாளர் அங்கு வாக்குறுதி அளித்தார்.

அதிபரை இடமாற்றம் செய்யாவிட்டால் இனிவரும் தினங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என பெற்றோர்கள் பின்னர்; ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

 - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment