தனது மகனின்
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த தந்தையொருவரின் கைத்தொலைபேசி நீதிமன்றில் ஒலித்ததன்
காரணமாக நீர்கொழும்பு பிரதான நீதவான் அந்த நபருக்கு 750 ரூபா தண்டம் விதித்தார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றின் முதலாம் இலக்க அறையில் இடம்பெற்றது.
நீர்கொழும்பைச் சேர்ந்த டியூடர் பெர்னாந்து என்பவருக்கே
நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த
மேற்படி அபராதத் தொகையை விதித்தார்.
முதலாம் இலக்க அறையில் வழக்கு விசாரணை இடம்பெற்றுக்
கொண்டிருந்தபோது தனது மகனின் வழக்கு விசாரணைக்காக அங்கு வந்திருந்த குறித்த நபரின்
செல்லிடத் தொலைபேசி ஒலித்துள்ளது. இதனை அடுத்து அங்கு நின்ற அதிகாரி அந்த நபரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே நீதவான் 750
ரூபா தண்டம் விதித்தார்.
No comments:
Post a Comment