கடந்த
மாதம் 18 ஆம் திகதி திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமான பெண்னொருவரின் செல்லிடத்
தொலைபேசியை பயன்படுத்தி வர்த்கர் ஒருவரிடம் 100 இலட்சம் ரூபா கப்பமாக் கேட்டு அச்சுறுத்திய பாதாள உலகத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தயட்சகர் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டி
பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மற்றும் 25 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
சந்தேக நபர்களை கைது செய்யும் போது அவர்களிடமிருந்து இரண்டு கை குண்டுகளையும் 20 கிராம்
ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திவுலப்பிட்டி
பிரதேசத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர்
அண்மையில் 105 இலட்சம் ரூபாவுக்கு வாகனமொனறை வாங்கியுள்ளார். இதனை அறிந்துகொண்ட சந்தேக
நபர்கள் தூனகஹ சுஜித் என்ற பாதாள உலகத் தலைவரின்
அடியாட்கள் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு தொலைபேசி மூலமாக முறைப்பாடு செய்த வர்த்தகரிடம் சந்தேக நபர்கள்
100 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாகக் கேட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் இதுதொடர்பாக பொலிஸாருக்கு செய்த
முறைபபாட்டடை அடுத்து பொலிஸார் அச்சுறுத்தல்
விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் தொடர்பாக பரிசீலித்த போது அந்த எண் கடந்த மாதம் 18 ஆம் திகதி
திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன
விபத்தில் மரணமான பெண்னொருவருடையது என்பது தெரிய வந்துள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே
அந்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாக விபத்தில்
மரணமான பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளனர். விபத்து இடம்பெற்றவுடன்
சந்தேக நபர்கள் அந்த தொலைபேசியை விபத்து
நடத்த இடத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதேவேளை,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மினுவாங்கொடை
நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்தபோது சந்தேக
நபர்கள் இருவரையும் எதிர்வரும் 18 ஆம் தகிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை
பிரதான மஜிஸ்ட்ரேட் எம். தம்மிகா உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ்
அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் ஆலோசனையின் பேரில் சட்டத்தைப் பலப்படுத்தும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்
மனோஹரம் தலைமையிலான கு ழுவினர்
சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment