மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்துவும் அவரின்
அடியாட்களும் கட்டுநாயக்க கட்டுநாயக்க விமான
நிலைய பயணிகள் சேவை சாரதிகள் சங்கத்தை துப்பாக்கி முனையில் கைப்பறியுள்ளதாகவும், சங்கத்தின்
பிரதான பதவிகளில் இருப்பவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த சங்கத்தின்
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் குற்றச்hட்டு தெரிவித்தனர்.
சீதுவை
சன்ஹில் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (1-7-2016) மாலை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில்
சங்கத்தின்
முக்கியஸ்த்தர்கள் மேற்படி குற்றச்சாட்டை
தெரிவித்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விமான நிலைய பயணிகள்
சேவை சாரதிகள் சங்கத் தலைவர் விமல்சிறி கருனாதிலக்க , முன்னாள் செயலாளர் திலக் ரணசிங்க,
பொருளாளர் அனுர பெர்னாந்து, சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
தலைவர் விமல்சிறி கருனாதிலக்க
1993
ஆம் ஆண்டில் எமது சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது 135 பேர் சங்கத்தில் உள்ளனர். 2002 ஆம் ஆண்டு விமான நிலையத்தில் எமது
சங்கத்திற்கு கவுன்டர் (மேடை) கிடைத்தது. விமான
நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளுக்கு போக்குவரத்து சேவையை எமது சங்கம்
வழங்குகிறது.
இன்று எமது சங்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சங்கத்தின்
பிரதானிகள் சங்கத்தை நடத்துவதற்கு இடையூறுகளை எதிர்நோக்கியுள்ளனர். நாங்கள் அரசியல்
ரீதியில் செயற்படுவது கிடையாது. புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததன் பின்னரே எமக்கு பிரசசி;னை
ஆரம்பமானது. எமது இரண்டு வாகனங்கள் உடைக்கப்பட்டன. ஆயினும் நாங்கள் சட்டத்தின் உதவியை
நாடவில்லை. பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தோம்.
கட்டானையைச்
சேர்ந்த மாகாண அரசியல்வாதியியும் அவரது அடியாட்களும் எமக்கு அச்சுறுத்தல்விடுத்து வருகின்றனர். மரண அச்சுறுத்தல்
காரணமாகவே இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகிறோம்.
எமது சங்கத்தில் உள்ள ஒரு சிலர் தமது சுய நலத்திற்காக சங்கத்தை இல்லாமற் செய்ய முயற்சித்து
வருவது கவலைக்குரியது என்றார்.
பொருளாளர் அனுர பெர்னாந்து
எமது
சஙகத்தின் அலுவலகத்தை மாகாண சபை உறுப்பினரின் ஆட்கள் பலாத்காரமாக கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்துவின் அடியாட்கள் எமது சங்கத்தின் செயலாளர்
திலக் ரணசிங்கவின் வீட்டுக்குச் சென்று அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து நிருவாகச்
சபையில் பலாத்காரமாக மூன்று பேரை சேர்த்துக்
கொண்டனர். பிறகு ஐந்து இலட்சம் ரூபாவை சமூக
சேவை விடயத்திற்கு எனப் பெற்றுக் கொண்டனர். எமது சங்கத்தின் முக்கிய பதவிகளை அவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர்.
செயலாளர் பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்துவின் அடியாளான தம்மிக்க என்பவர்
நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சங்கத்தை கைப்பற்றிய பின்னர் 25 பேரை தலா நான்கு இலட்சம்
ரூபாவை பெற்றுக் கொண்டு சங்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.
முன்னாள் செயலாளர் திலக் ரணசிங்க
துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக எனது செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தேன். தம்மிக்க என்பவர் என்னைத் தாக்கிவிட்டு எனது செயலாளர்
நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அச்சுறுத்தல்
காரணமாக அவர்களின் மூன்று பேரை பணிப்பாளர் சபையில் சேர்த்துக் கொண்டோம். எமது சங்கத்தின்
யாப்பின்படி ஒருவர் சங்கத்தில் அங்கத்தவராகச்
சேர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே பதவிகளை பெறமுடியும். ஆயினும் அவர்களின் மூன்று
பேர் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பயத்தின்
காரணமாக நான் அனுராதபுரம் சென்று தலைமறைவாக இருந்தேன். சங்கத்தின் உறுப்பினர்கள் என்னை
மீண்டும் அழைத்து வந்துள்ளனர். எனக்கு தற்போதும்
தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பயத்தின் காரணமாக நான்; வீட்டில்
இருக்கும் போதும் கதவை பூட்டியே வைத்து இருக்கிறேன். ஜனாதிபதி மற்றும் பிரதமர் எமது பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை தரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment