Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 3, 2016

தளுபத்தை சாந்த அந்தோனி தேவாலயத்தில் திருச்சுரூப்துடன் 20 தங்கச் சங்கிலிகள் திருட்டு

 நீர்கொழும்பு தளுபத்தை சாந்த அந்தோனி தேவாலயத்தில் உள்ள 149 வருடங்கள் பழைமை வாய்ந்த திருச்சுரூப்துடன் அதில் அணிவிக்கப்பட்டிருந்த 20 தங்கச் சங்கிலிகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்  கடந்த புதன்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் திருச் சுரூபத்துக்கு அருகில்  நடமாடியமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட திருச் சுரூபம்  தேவாலயத்திற்கு அருகில் உள்ள  பாழடைந்த இடத்தில் கைவிட்டுச்  செல்லப்பட்டுள்ளது. திருச் சுரூபத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டுள்ளதுடன் அருகில் இரத்தக் கறைகள்  இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.  திருச் சுரூபத்தை திருடயவன் கண்ணாடியை உடைக்கும் போது காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அதன் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment