இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர் ஒருவரிடமிருமிருந்தும் இரண்டு இந்திய பிரஜைகளிடமிருந்தும்
110 கருத்தடை மாத்திரைகள், 5380 போதை மாத்திரைகள் மற்றும் அதிக விலையுடைய 93 மதுபான
போத்தல்கள் என்பவற்றை கடந்த புதன்கிழமை (29-6-2016) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்
கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய இலங்கையர் ஒருவரும் 27 மற்றும்;
50 வயதுடைய இந்திய பிரஜைகள் இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். விமான நிலைய பயணிகள்
வெளியேறும் பிரிவில் சந்தேக நபர்கள் ஒருவருக்காக
காத்திருந்த வேளையில், பொலிஸார் சந்தேக நபர்களின்
பயணப் பொதிகளை சோதனை செய்தபோது கருத்தடை மாத்திரைகள்,
போதை மாத்திரைகள் மற்றும் மதுபான போத்தல்கள் என்பவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளையும்,
கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் சட்டவிரோத கருக்கலைப்புக்களை மேற்கொள்ளும் கருக்கலைப்பு
நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக
கருத்தடை மாத்திரைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக சென்னைக்கும் கொழும்புக்குமிடையில்
இந்த வியாபாரம் நடந்துள்ளமை விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
அனுர அபேவிக்ரமவின் ஆலோசனையின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி
பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்னக கோபிபெவல தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை
கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment