22 வயது யுவதி ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது
இரகசியமான முறையில் செல்லிடத் தொலைபேசியால்
வீடீயோ செய்த செய்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்
செய்யப்பட்ட 15 வயது சிறுவனை நீர்கொழும்பு பிரதான நீதவான் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மாகொல சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
திம்பிரிகஸ்கட்டுவ 60 அடி வீதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
தளுபத்தை, மீரிகமை வீதியைச் சேர்ந்த யுவதி
ஒருவர் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது இரகசியமான முறையில் யாரோ ஒருவர்
தினமும் வீடியோ செய்வதாக குறித்த யுவதியின் தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்த
யுவதியின் தாயார் தனது மகளை குளியலறைக்கு அனுப்பி குளிக்குமாறு கூறிவிட்டு மறைந்திருந்து அவதானித்துள்ளார்.
வழமைப் போன்று அங்கு வந்த சிறுவன் யுவதி குளிப்பதை
வீடியோ செய்வதற்காக தண்ணீர் குளாயொன்றை பற்றிப்பிடித்து ஏறி குளியலறையின் யன்னலினூடாக வீடியோ செய்ய முற்பட்டபோது யுவதியின்
தாயார் சிறுவனைப் பிடித்து நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக முறைப்பாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பல்வேறு முறைப்பாடுகள்
பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்
சி.எம்.டி. திசாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் சரத்குமார சந்தேக நபரான சிறுவனை மன்றில் ஆஜர் செய்தார்.
சந்தேக நபரான சிறுவனை உளவியல் வைத்தியரிடம்
காண்பித்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment