போதைப் பொருள் பாவிப்பதற்காகவும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும் நீர்கொழும்பு
மற்றும் அயற்பிரதேசங்களில் கொள்ளைகள் பலவற்றில்
ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை அடையாள அணிவகுப்பிற்கு
உட்படுத்தும் வகையில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு குரணை பிரதேசத்தைச் சேர்ந்த சோவா என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படும் ரொசான்
சிறி கான் பெரேரா, நீர்கொழும்பு ஐந்து ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த வெதகே ஹர்ஸ சத்துரங்க
பெரேரா என்ற 25 மற்றம் 26 வயதுடைய
சந்தேக நபர்களே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களாவர்.
பல இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை
கொள்ளையிட்ட சம்பவங்கள் பல தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு பிராந்திய
பொலிஸ் அத்தியட்சகரின் விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நீர்கொழும்பு நகரில்
14 குற்றச் செயல்களும் அண்மித்த பிரதேசங்களில் மேலும் சில குற்றச் செயல்களும் புரிந்துள்ளதாக
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில்; கொள்ளையிட்டமை
, வர்த்தகர்களின் வாகனங்களில் கொள்ளையிட்டமை
, வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்டமை மற்றும் வீதிகளில் பயணிப்போர்களிடம் பணம் மற்றம் நகைகள் கொள்ளையிட்டமை
ஆகியன சந்தேக நபர்களுக்கு எதிரான மேலும் சில குற்றச்சாட்டுக்களாகும்.
இரவு வேளைகளில் வீடுகளை கொள்ளையிட்டுள்ள
சந்தேக நபர்கள் வீடொன்றை கொள்ளையிட்டு அங்குள்ள நகைகளை கைவசம் வைத்திருந்தபோது பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment