பிள்ளைகளால்
கைவிடப்பட்ட 70 வயது தந்தையை மனநல வைத்தியரிடம்
காண்பித்து எதிர்வரும் 18 ஆம் திகதி வைத்திய
அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அது வரை நீதிமன்ற
பாதுகாப்பின் கீழ் வைக்குமாறும்; நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு, கடற்கரை வீதியைச் சேர்ந்த எமலின் பெரேரா என்ற வயேதிபப் பெண்மணியே பிள்ளைகளால்
கைவிடப்பட்ட 70 வயது தாயாராவார்.
நீர்கொழும்பு
பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸாரிடம் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தாயை நபர் ஒருவர் அண்மையில் ஒப்படைத்துள்ளார். பொலிஸார்
குறித்த தயாரிடம் விசாரித்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பிள்ளைகள் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது.
அந்த தாயின் ஒரு மகன் வர்த்தகராக நல்ல பொருளாதார நிலையில் இருந்தவராவார். ரயில் விபத்தொன்றில்
தனது இரண்டு கால்களையும் இழந்து தற்போது அவர் வசிப்பதற்கு இடமின்றி வீதியில் வசித்து
வருகிறார்.
தற்போது
இன்னொரு மகன் தனது தாயை பொறுப்பேற்க முன்வந்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார்
இந்த தாயார் தொடர்பாக சமூக சேவை அதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment