பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனது வேனில் பாடசாலைக்கு
அழைத்துச் சென்ற 10 வயது சிறுமியை இனிப்புப்
பொருட்களை கொடுத்து ஐந்து மாத காலமாக துஸ்பிரயோகம்
செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வேன் சாரதியின்
பிணை கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல சந்தேக
நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கட்டானை,
தாகொன்ன, ரன்விமன பிரதேசத்தைச சேர்ந்த சுனில்
ஸ்டேன்லி என்ற சாரதியே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டவராவார். 52 வயதுடைய இவர் திருமணமானவராவார்.
சந்தேக
நபரினால் பாடசாலை போக்குவரத்துச் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனத்தில் 10 சிறுவர் சிறுமியர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர்.
பாடசாலை முடிவடைந்ததும் இறுதியில் இறங்குவது பாதிக்கப்பட்ட 10 வயதுச் சிறுமியாவார்.
இதன்போது குறித்த சிறுமி டொபி, சாக்லட் போன்ற இனிப்புப் பெருட்கள் கொடுத்து சந்தேக
நபரினால் கடந்த ஐந்து மாத காலமாக துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார் என முறைப்பாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிது
காலமாக சிறுமி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து சந்தேக
நபரினால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கட்டானை
பொலிஸார் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்தனர்.

No comments:
Post a Comment