Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, September 13, 2016

கொக்கைன் போதைப் பொருள் கடத்தி வந்த பொலிவிய பெண்னை 19 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

இரண்டு கிலோ 6 கிராம் கொக்கைன் ரகத்தைச் சேர்ந்த போதைப் பொருளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (12)  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிவியாவைச் சேர்ந்த பெண்னை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

48 வயதுடைய பெண்னொரவரே தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபரான பொலிவிய பெண்மணி பிரேஸிலிலிருந்து எத்தியோப்பா ஊடாக இந்தியாவின் டில்லி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானத்தில் பயணித்து இலங்கைக்கு வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரான பெண் உல்லாசப் பயணி போன்று இங்கு வந்துள்ளார்.  அவரது பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் கொக்கைன் போதைப் பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கிரீஸ் மற்றும்  வாசம் வீசும் 'பார்ம்;' ஒன்iறை பாவித்து போதைப் பொருள் பொதிக்கு கவசம் இடப்பட்டிருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்






இலங்கைக்கு முதல் தடைவை வந்துள்ள சந்தேக நபரான பெண் போதைப் பொருள் விநியோகித்தமை தொடர்பாக தென்னாபிரிக்காவில் 5 வருட காலம் சிறைத் தண்டணை பெற்றுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்பப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



இவர் கொள்ளுபிட்டி பகுதியில் அமைந்துள்ள  ஹோட்டல் ஒன்றில் தங்க இருந்ததாகவும், அங்கு வைத்து இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் இவர் கொண்டு வந்த போதைப் பொருளை பெற இருந்ததாகவும் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

படம்:   சீல் வைக்கப்பட்ட  போதைப் பொருள் பொதி , சந்தேக நபரான பெண் நீதிமன்ற தொகுதியில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தருடன் அமர்ந்திருக்கும் காட்சி, நீதி மனறத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி


No comments:

Post a Comment