கொச்சிக்கடை
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடங்காவல் பிரதேசத்தில் மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட
நீர் நிறைந்த குழியில் விழுந்து
பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் மரணமானமை தொடர்பாக கொச்சிக்கடை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இருவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில
துஸ்ஸந்த எபிட்டவல தலா பத்தாயிரம் ரூபா
அபராதம் விதித்ததுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த குழிகளை மூடுமாறு பிரதிவாதிகளுக்கு
உத்தரவிட்டதுடன் இதுதொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமர்றும் பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (11)
உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை
உடங்காவல் பிரதேசத்தைச் சேர்ந்த ராமையா ஜே மகேஸ், ஜோசப் காலோ மேரியன்ஸ் பெர்னாந்து
ஆகியோருக்கே நீதவதான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். பிரதிவாதிகள் இருவரும்
புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர
நிபந்தனைகளை மீறி மண் அகழ்ந்தமை தொடர்பாக
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
தோப்பு
ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவர் உடங்காவல் பிரதேசத்தில் மண் அகழ்வதற்காக தோண்டப்பட்ட நீர் நிறைந்த
குழியில் விழுந்து மரணமான சம்பவத்தினை
அடுத்து , கடந்த திங்கட்கிழமை காலை பிரதேசவாசிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை
நட்த்தியதை தொடர்ந்து கொச்சிக்கடை பொலிஸார் பிரதிவாதிகள் இருவரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே நீதவான்
பிரதிவாதிகளுக்கு அபராதத் தொகையை விதித்ததுடன் தோண்டப்பட்ட குழிகளை எதிர்வரும்
நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் மூடுமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை கொச்சிக்கடை மற்றும் கட்டானை பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மண் அகழ்வதற்காக தோண்டப்பட்டு இதுவரை மூடப்படாத
குழிகள் பல இருப்பதாக சுட்டிக்காட்டும் பிரதேசவாசிகள் , அவற்றில் யாராவது விழுந்து
மரணம் சம்பவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகா அந்தக் குழிகளை மூடுவதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்? என அவர்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment