புவிச்சரிதவியல் சரங்க அகழ்வு பணியகத்தினால் மண்
கொண்டு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை போலியாக தயாரித்து மண் ஏற்றிச் சென்ற சாரதியை நீர்கொழும்பு பிரதான
நீதவான் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
கட்டானை ஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த
டி.எம்.பிரதீப் குமார (25 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
கொச்சிக்கடை மடம்பெல்ல பிரதேசத்தில் வைத்து
கொச்சிக்கடை பொலிஸார் சந்தேக நபர் மண் ஏற்றிச் செலவதற்கு பயன்படுத்திய
அனுமதிப்பத்திரத்தை பரிசோதித்த போது அது போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம்
என்பது தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment