தாகொன்ன
குளத்தில் மீன் பிடிப்பதற்காக நிலத்தை தோண்டி புழுக்களை பெறுவதற்கு முயற்சி செய்த நபர்
ஒருவர் குண்டு போன்ற ஒன்றை கண்டெடுத்த சம்பவம்
தொடர்பாக கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து கட்டானை குற்ற விசாரணைப்
பிரிவு பொலிஸார் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை அடுத்து பிளாஸ்ரிக் போத்தலில்
பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கை குண்டு ஒன்றை இன்று கண்டெடுத்துள்ளனர்.
இந்த கை குண்டு குற்றச் செயல் ஒன்றை புரிவதற்காக
சில மாதங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கை
குண்டை மறைத்து வைத்த நபரை கைது செய்வதற்கு கட்டானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment