கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்திற்காக
(போர்ட் சிட்டி) உஸ்வெட்ட கொய்யா முதல் கொச்சிக்கடை வரையிலான கடற்பகுதியில் மணல் அகழ்வதை நிறுத்துமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு
மாநகர சபை முன்றலில் மீனவர்கள் மூன்றாவது நாளாக
இன்று தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டம் நடத்துகின்றனர்.
சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அங்கு குழுமியுள்ளனர்.
தமது கோரிக்கை வெற்றியளிக்கும் வரையில் போராட்டம்
தொடரும் என்று மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
படவிளக்கம்
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்று (19) பகல் சென்ற பிஸொப் இமானுவெல் பெர்னாந்து அங்கு
உரையாற்றுவதையும், அருட் தந்தை ரொஸைரோ, அருட் தந்தை டொனி பின்டோ, அருட் தந்தை டெரன்ஸ்
பேட்டியாகொட, ஆகியோர் அருகில் நிற்பதையும்,
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் படங்களில் காணலாம்.





No comments:
Post a Comment