நீர்கொழும்பு
மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பிக்பாக்கட் அடித்து வந்த 17 வயது யுவதி ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிஐ. பிரியந்த ஏக்க நாயக்க தெரிவித்தார்.
கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் உள்ள கடைக்கு
சிறு குழந்தையுடன் வந்த பெண் ஒருவரின் பணத்தை கைது செய்யப்பட்ட சந்தேக நபரான யுவதி
திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
செய்யப்பட்ட யுவதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்ட போது சந்தேக நபரினால் திருடப்பட்ட செல்லிடத் தொலைபேசி,
பேர்ஸ், அடையாள அட்டை உட்பட பல்வேறு பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது
தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
கைது செய்யப்பட்ட யுவதி கல்பிட்டி , கந்தக்குளி பிரதேசத்தைச்
சேர்ந்தவராவார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலயத்தில் உள்ள தொழிற்சாலை
ஒன்றுக்கு தொழிலுக்கு வந்துள்ளார். சனிக்கிழமை தினத்தில் தன்னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன்
நீர்கொழும்பு இரவு நேர சந்தைக்கு வருவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். பின்னர் தனித்து
இரவு நேர சந்தைக்கு வந்து பெண்களின் பணம்,
செல்லிடத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளார். இவர் பெண்களிடம் மாத்திரமே இவ்வாறு திருடியுள்ளார்.
55
ஆயிரம் ரூபா பெறுமதியுடைய செல்லிடத் தொலைபேசி -1 , 30 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தொலைபேசி
– 3,தேசிய அட்டைகள் -11, பணப்பைகள் -35 என்பவற்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர். கட்டுநாயக்க
விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரிடம் சந்தேக நபர் 70 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.
குட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான
பொலிஸ் பரிசோதகர் சிஐ. பிரியந்த ஏக்க நாயக்கவுக்கு
கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக
நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment