நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பிரபல பௌத்த தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும்
மாணவன் ஒருவனை பாடசாலை முடிவடைந்த வேளையில்
வாகனமொன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அடையாள
அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் இரண்டு சந்தேக நபர்களை குறித்த
மாணவன் நீதிமன்றில் அடையாளம் காட்டியள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல முன்னிலையில்
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31) சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போதே இருவர்
அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்பின் பின்னர் சந்தேக
நபர்கள் நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை கடுமையாக எச்சரித்த பிரதான நீதவான் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும்,
தலா பத்தாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் சந்தேக
நபர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment