வீடொன்றில் புகுந்து மடிக்
கணணி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை திருடிய நபர் ஒருவரை
நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் கடந்த
சனிக்கிழமை (5) கைது செய்துள்ளதுடன் சந்தேக நபரினால் திருடப்பட்ட பொருட்களையும்
கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி
பிரதேசத்தைச் சேர்ந்த இத்திரனியல் மற்றும் மின்சார இணைப்புகளை (வயரிங்) மேற்கொள்ளும் தொழில் செய்து வரும் 42
வயதுடைய திருமணமாகாத நபரே கைது
செய்யப்பட்ட சந்தேக நபராவார்.
இச்சம்பவம் தொடர்பாக
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
2016 ஆகஸ்ட் மாதம் 21 ஆம்
திகதி விதவைப் பெண் ஒருவர் கட்டானை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்தார். குறித்த பெண் தனது மகளுடன் கம்பஹா பிரதேசத்தில்
நடைபெற்ற வைபவமொன்றுக்கு சென்றிருந்த வேளையில் தனது வீட்டிலிருந்த மடிக்கணனி,
தொலைக் காட்சிப் பெட்டி, செல்லிடத் தொலைபேசி, டொங்கல் மற்றும் வீட்டிலிருந்த
தண்ணீர் இறைக்கும் இயந்திரம் என்பன களவு போயுள்ளதாக அந்தப் பெண் முறைப்பாடு
செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டை பிராந்திய
சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு விசாரணைக்கு எடுத்தது. காணாமல் போன செல்லிடத்
தொலைபேசி விலச்சிய பிரதேசத்தில் பயன்படுத்தப்படுவது தொழில ;நுட்பத்தை பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது. விலச்சிய பிரதேசத்தில் பொலிஸார்
அந்த தொலைபேசியை பயன்படுத்திய சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேக நபர் விலச்சிய
பிரதேசத்தில் வயரிங் செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் முன்னர்
குறிப்பிட்ட பெண் செய்த முறைப்பாட்டின்படி
அவரது வீட்டிலிருந்த பொருட்களை சந்தேக நபர் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரினால் திருடப்பட்ட மடிக்கணனி அவரு நண்பர் ஒருவரிடமிருந்து
கைப்பற்றப்பட்டதுடன் ஏனைய பொருட்கள் சந்தேக நபரின் வீட்டிலிருந்து
கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் அந்த பெண்ணின்
வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றை பழுதுபார்க்கச் சென்றுள்ளார். அந்த தொலைக்
காட்சிப் பெட்டியை பழுதுபார்க்கும் வரை தன்னிடமிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை
அவர்களுக்கு கொடுத்துள்ளார். பின்னர் அந்த
வீட்டில் திருடிய போது தான் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியையும் சேர்த்து சந்தேக
நபர் திருடியுள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார்
விசாரணை மேற்கொண்டபோது முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டில் திருடியமைக்கான காரணத்தை கூறியுள்ளார். அந்த வீட்டில் இருந்த
முறைப்பாட்டாளரது மகள் மேல் தனக்கு விருப்பம்
ஏற்பட்டதாகவும் , அந்த யுவதியின் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுவது போன்று அங்கு சென்று
பொருத்தமான நேரத்தில் தனது காதலை யுவதியிடம் தெரிவிக்கலாம் என்று கருதியே அந்த வீட்டில் திருடியதாகவும் சந்தேக
நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேக நபiர்
நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக கட்டானை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
படம்: கைப்பற்றப்பட்ட பொருட்களை பொலிஸார்
பரிசோதிப்பதை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment