பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகும் 15 முதல் 18 வயது வரையான இளைஞர் குழாத்தினரை டீ.ஜே. இசைக் கச்சேரிக்கு அழைத்து அவர்களுக்கு போதை
மாத்திரை வழங்கி பணம் சம்பாதிக்கும் நிலையம் என கூறப்படும் இசைக் கச்சேரி நிலையம் ஒன்றை நீர்;கொழும்பு பொலிஸார் சுற்றிவளைத்து
ஹோட்டல் முகாமையாளர் ஒருவரையும் இசைக்கச்சேரியை ஏற்பாடு சந்தேக நபர்
ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸாருக்குக்
கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார்
சுற்றவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் அனுமதியின்றி குரணை பிரதேசத்தில் களப்பு பகுதிக்கு அருகில்
அமைந்துள்ள
குறித்த ஹோட்டலில் தகரத்தினால் மறைத்து இந்து டி.ஜே. இசைக்கச்சேரி நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த
நிலையத்தில் நுழைவதற்கு ஒருவரிடமிருந்து 1500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது.
பொலிஸார் சுற்றவளைப்பை மேற்கொண்டபோது 20 இளைஞர் யுவதிகள் அங்கு
இருந்துள்ளனர்.
அங்கு வந்திருந்த 15 முதல் 18 வயது வரையான இளைஞர் யுவதிகள்
தனியார் வகுப்புக்கு செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு அங்கு வந்துள்ளனர்.
சம்பவத்தை அறித்த அவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நண்பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த நிலையத்தில் அனுமதியின்றி டீ.ஜே. இசைக்கச்சேரி தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளது. அங்கு வரும்
இளைஞர்களை வரவேற்க இரு பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேற்கொண்ட
விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
அங்கு வரும் இளைஞர்கள்
களைப்படையாமல் நீண்ட நேரம் நடனமாட போதை மாத்திரைகள் வழங்கப்படுவதாக தகவல்
கிடைத்துள்ளபோதும் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது அங்கு மாத்திரைகள்
கைப்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக
நபர்களை மனறில் ஆஜர் செய்வுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment