சின்ன ரோம் என
அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் கிறிஸ்மஸ் வியாபாரம் களைக்ககட்டியுள்ளது. நகர
மத்தியில் வர்த்தக கடைகள் அமைந்துள்ள
வீதிகள், வாராந்த
சந்தைகள், வார இறுதிச் சந்தைகளில் பெரும்
எண்ணிக்கையான பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
வீதியோரங்களில் தற்காலிக கடைகள்
அமைக்கப்பட்டுள்ளன. கடைகள் பலவற்றில் மலிவு விற்பனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நகரின் வீதிகள், கடைகள், ஹோட்டல்கள் கிறிஸ்மஸ் மற்றும்
புதுவருடத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகையும்
நகரில் அதிகரித்துள்ளது.
படம்: மக்கள் பொருட்கொள்வனவில்
ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment