Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, December 22, 2016

அடுத்த வருடத்தை இலங்கையில் ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய நத்தார் உற்சவத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

அடுத்த வருடத்தை இலங்கையில் ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.  அடுத்து வரும் சில மாதங்களுக்கு நாட்டில் மழை பெய்யாது வரட்சி நிலவும் என தெரிய வருகிறது. இது தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2017 ஆண்டை இலங்கையில் ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக பிரகடனபடுத்தியிருக்கும் நிலையில் கால நிலை எமக்கு பாதகமாக அமைந்துள்ளது. எனவே,  எமது வேலைத்திட்டங்கள் நிறைவேற அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வமதத் தலைவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சுர்வ மதத் தலைவர்கள் தமது
சமய  அனுஸ்டான்ஙக்ள மற்றம் பிரார்த்தனைகளின் போது நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூஜைகள் நடத்த வேண்டும் என்று நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய நத்தார் உற்சவத்தில் ஜனாதிபதி  மைத்திறிபால சிறிசேன தெரிவித்தார்.






தேசிய நத்தார் தின நிகழ்வு நீர்கொழம்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சாந்த மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழவில் ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,  ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா, மேல் மாகாண சபை  அமைச்சர் லலித் வணிகரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெரனாந்து, கததோலிகக மதத் தலைவர்கள், அருட் சகோதிரக்ள, பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.

; ஜனாதிபதி  மைத்திறிபால சிறிசேன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.
உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் கொண்டாடும்  நத்தார் தினத்தை எமது நாட்டில் தேசிய நத்தார் உற்சவமாக நீர்கொழும்பு நகரில் கொண்டாடும் நிகழ்வில் நான் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
நத்தார்  அன்பு, சமாதானம், கருணை, ஐக்கியம் என்பவற்றை எப்போதும் கூறிநிற்கிறது. எமது நாட்டைப் போன்று  உலகிற்கும் அதுவே அவசியமானதாகும்.




இயேசு நாதர் தோன்றிய காலத்தில் அனாச்சாரம் நிலவியது. அமைதியின்மை நிலவியது. புத்தர்  தோன்றிய காலத்திலும் இந்நிலையே தோன்றியது. உலகில்   சமய தூதர்கள் தோன்றும் காலங்களில் இந்நிலையே நிலவியது.
எமது நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினை காரணமாக நிலையான சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக , ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக, வறிய மக்களுக்காக  வசதிபடைத்தவர்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, மனிதர்கள் சமூக பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக ,  மனிதர்களின் அறிவு, புத்தி என்பவற்றை மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்வதற்காக,  குறிப்பாக   சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக  கொண்டாடப்படும் மகத்தான தினமாக நத்தார் தினத்தை கருதிகிறோம்.
இதன் காரணமாகவே  அரச நத்தார் தினத்தை  கத்தோலிக்க, கிறிஸ்தவ  மக்கள் அதிகமாக வாழும் நீர்கொழும்பில் கொண்டாடுவதற்கு தீர்மானித்தோம். கத்தோலிக்க மக்களுக்காக மட்டுமன்றி சமாதானத்தின் முக்கியத்துவத்தை  சகலருக்கும் தெரியப்படுத்துவதற்காக நீர்கொழும்பு நகரில்  தேசிய நத்தார் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே சகலருக்கும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு உள்ளது.
உலகில் நல்ல மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையானோரே தீய பண்புள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். தீய பண்புள்ள மனிதர்களால் அதிக எண்ணிக்கையான நல்ல மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அடுத்த வருடத்தை இலங்கையில் ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.
 அடுத்து வரும் சில மாதங்களுக்கு நாட்டில் மழை பெய்யாது வரட்சி நிலவும் என தெரிய வருகிறது. இது தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2017 ஆண்டை இலங்கையில் ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக பிரகடனபடுத்தியிருக்கும் நிலையில் கால நிலை எமக்கு பாதகமாக அமைந்துள்ளது. எனவே,  எமது வேலைத்திட்டங்கள் நிறைவேற அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வமதத் தலைவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சுர்வ மதத் தலைவர்கள் தமது சமய  அனுஸ்டான்ஙக்ள மற்றம் பிரார்த்தனைகளின் போது நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூஜைகள் நடத்த வேண்டும்.
நான் ஜனாதிபதியாகி ஒருவார காலத்தில் பாப்பரசர் இலங்கை வந்தார். நான் ரோம் சென்று அவரின் ஆசி பெற்றேன். உலகில் நிலவும் பயங்கரவாதத்தை ஒழிக்க  என்ன செய்யவேண்டும் என பாப்பரசர் என்னிடம் கருத்து கேட்டார். நான் இதற்கான பதில் நீண்டது என்பதால் அமைதியாக இருந்தேன்.
யுத்தம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியேர் ,அல்லது அவர்களை தோற்கடித்தோ பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மாறாக  யுத்த ஆயதங்களை தயாரிப்போரிடம் அதனை நிறுத்துமாறு கூறுவதன் மூலமாகவே  பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என பாபபரசர் தெரிவித்தார்.
இந்நிகழ்வ0ல் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வில் மாணவர்களின் நத்தார்  நிகழ்ச்சிகள், இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் பரிசுகள் வழங்கப்பட்டன. 










No comments:

Post a Comment