அன்பையும் சமாதானத்தையும் உலகத்தில் நிலை நிறுத்த வேண்டுமாயின்
ஒவ்வவொருவரும் தனது தனித்துவத்தையும். தமது என்று கூறிக்கொள்ளும் விடயங்களையும்
மறந்து விடவேண்டும். மூன்று தசாப்தகால
கொடிய யுத்தத்தின் பின்னர் சமாதானத்தை நிலை நிறுத்த, இனங்களிடையே
ஐக்கியத்தை பேணுவதற்கான சவாலுக்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளோம். இதற்காக இயேசு
நாதர் எமக்கு காட்டிய முன்னுதாரணங்களை
முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
அடுத்தவர்களுடன் இணைந்து வாழ்வதற்காக இன ரீதியாக, மத ரீதியாக, குல
ரீதியாக அல்லது வேறு வகையில் எமது
தனித்துவத்தை கருதும் போது அவைகளை மறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
தெரிவித்தார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் (22) உரையாற்றுகையிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழவில் ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா, மேல் மாகாண சபை அமைச்சர் லலித் வணிகரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெரனாந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள், அருட் சகோதரிகள், கம்பஹா மாவட்டச் செயலாளர், நீர்கொழும்பு பிரதேசச் செயலாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.
பேராயர்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு மேலும்
உரையாற்றுகையில் தெரிவத்ததாவது,
நாட்டில்
சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டுமாயின் சிங்களவர்கள்;, தமிழர்கள், முஸ்லிம்கள், பேர்கர், கிறிஸ்தவர்கள் அல்லது
வசதிபடைத்தவர்கள், வறியவர்கள், கற்றவர்கள், கல்லாதவர்கள் என்று எமது தனித்துவத்தை
பார்க்காமல் அவைகளை மறந்துவிட்டு அடுத்தவர்களின் தனித்துவத்திற்கு
முக்கியத்துவத்திற்கு கைகொடுத்து ஐக்கியத்துடனும் ஒற்றுமையடனும் வாழ வேண்டும்.
யேசு கிறிஸ்து இந்த செய்தியை வழங்குவதற்காகNவு உலகில் தோன்றினார்.
நீர்கொழும்பு
நகரம் எமது நாட்டில் ஏற்பட்ட 1958, 1983
ஆம் ஆண்டு கலவரங்களின் போது எந்த ஒருவருக்கும் தீங்கு விளைவிக்காத நகரமாகும். இது
தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
நகரில் சகல சமயத்தவர்களதும் மதஸ்த்தளங்கள் உள்ளன. எல்லோரும் இங்கு
ஐக்கியமாக வாழ்கிறார்;கள். ஏழ்மை
இருக்கும் இடங்களில் சமாதானம் நிலவுவதை நாங்கள் பெரும்பாலும் பார்க்கிகிறோம்.
பாதுகாப்பதற்கு ஒன்றும் இல்லாததன் காரணமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட
வேண்டியதில்லை. செல்வம் உள்ளவர்கள்தான் பொறாமையின் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்
கொள்கிறார்கள். இங்குள்ளவர்கள் பொருளாதார நிலையில் வறுமையில் உள்ள போதும்
உள்ளத்தினால் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இதன்காரணமாக நீரகொழும்பு நகரில்
தேசிய நத்தார் உற்சவத்தை நடத்துவதற்கு தீர்மானம் எடுத்ததையிட்டு
மகிழ்ச்சியடைகிறோம்.
ஜனாதிபதியவர்களுக்கு
பாரிய பொறுப்பு உள்ளது. இனங்களிடையே
ஒற்றமையை ஏற்படுத்தி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக
பிரச்சினைகளுக்கு தீரவு காண்பதற்கு
ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எமது ஒத்துழைப்பை வழங்குவோம்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment