Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, December 3, 2016

வீதியை மறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட 19 பேருக்கு 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வீதி சட்ட வீதிகளை  மீறும் வாகன சாரதிகளுக்கு  அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  25ஆயிரம் ரூபா அபராதத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கல்கத்தை  பகுதியில்  பிரதான வீதியை மறித்து  முச்சக்கர வண்டி சாரதிகள்   வெள்ளிக்கிழமை மேற்கொண்ட  ஆர்பாட்டத்தை அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட 19 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்;பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களில் ஒருவர் கம்பஹா மாவட்ட தனியார் பஸ் சங்கத்தின்  தலைவர் மதுரகே லெம்பர்ட் என்பவராவார்.
  நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை,  பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக 16 முச்சக்கர வண்டிகள், ஒரு லொறி, ஒரு பஸ் வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, கோணவல, ரததொழுகமை, புசல்லாவ, சீதுவை, கொழும்பு, கட்டானை, பிட்டிபனை, குரணை உட்பட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர். 
நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து  மன்றில் ஆஜர் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது .......











No comments:

Post a Comment