போக்குவரத்து
சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக அதிகரிக்கப்பட்டுள்ள போக்குவரத்து
தண்டப் பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்
பஸ் சாரதிகள் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்திய
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை உட்பட பல்வேறு குற்றசசாட்டுக்களின் பேரில் கைது
செயயப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர
வெலிவத்த எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
மேல்
மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிச்ந்திர, லலந்த குணசேகர ஆகியோரே விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
மேல்
மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் இன்று காலை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை
அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் மன்றில் ஆஜர் செய்தனர்.
நீதிமன்ற
தடையுத்தரவை மீறியமை, பொது சொத்துக்களுக்கு
சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமை, இரண்டு
பேரை கடத்திச் சென்று தாக்கியமை உட்பட பல்வேறு
குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபர்களில் 19 பேர் முதலில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்க உத்தரவிடப்பட்டனர். பொலிஸார் தொடர்ந்து
விசாரணை மேற்கொண்டு மேலும் நால்வரை கைது மன்றில் ஆஜர் செய்து சந்தேக நபர்கள் 23 பேரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் வீதியை மறித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஜா-எல உதம்மிட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஆனந்த ஹரிச்சந்திர,
நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் வசிக்கும் லலந்த குணசேகர ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள்
ஏற்பாடு செய்து வழிநடத்தியுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்தாக நீர்கொழும்பு
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்திலக்க வெலிவிட்ட மேலதிக அறி;க்கை ஒன்றை சமர்பித்து
கடந்த 1610 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின்
போது தெரிவித்திருந்தார்
இந்நிலையில் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும்
இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கைது செய்யப்பட்டதை
அடுத்து நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்;கறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இந்த
வழக்கு தொடர்பாக இதுவரை 25 பேர் கைது செய்யபபட்டு விளக்;கறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment