Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, December 25, 2016

கிராம சேவை உத்தியோகத்தரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதிக்கு விளக்கமறியல்

 நீர்கொழும்பு தினசரி சந்தையில் நத்தார் பண்டிகைக்காக பொருட்களை கொள்வனவு செய்ய தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாகக கூறப்படும்  முச்சக்கர வண்டியை சாரதியை நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய நிலுபுல் என்ற முச்சக்கர வண்டியை சாரதியே விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிடபபட்டவராவார்.

 நீர்கொழும்பு குரணை பிரதேசத்தைச் சேர்ந்த ரொஹான் தரின்ஜு என்ற கிராம சேவை உத்தியோகத்தரே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் சந்தேக நபரான முச்சக்கர வண்டியை சாரதியினால் தாக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தராவார்.
சம்பவம் இடம்பெற்ற அன்று கிராம சேவை உத்தியோகத்தர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தினசரி சந்தையில் நத்தார் பண்டிகைக்காக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி கிராம சேவை உத்தியோகத்தர் மீது பின்னால் வந்து மோதியுள்ளது. கிராம சேவை உத்தியோகத்தர் முச்சக்கர வண்டியை நிறுத்தி  இதுதொடர்பாக வினவியபோது சந்தேக நபர் அவரை தாக்கிவிட்டு  முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தரின் உறவினர் ஒருவர் முச்சக்கர வண்டியின் இலக்கத்தை குறித்து வைத்து நீர்கொழும்பு பொலிஸுக்கு அறிவித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண் மற்றும் பற்களில் ஏற்பட்ட காயங்களுடன் கிராம சேவை உத்தியோகத்தர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.




No comments:

Post a Comment