நீர்கொழும்பு
பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் நீர்கொழும்பு
கிளையில் (ஆகேட்) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த
நான்கு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான செல்லிடத் தொலைபேசிகளை திருடிக்
கொண்டு அந்த நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்
தலைமறைவாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்;பவம்
தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன்திலக்க
வெலிவிட்டவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ஆர்.எம்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற குறித்த நிறுவனம் சனிக்கிழமை
(14) பணி நேரம் முடிவடைந்து மூடப்பட்டதன் பின்னர்
காட்சிச் சாலையின் திறப்புகளுக்கு பொறுப்பாக இருந்த தலைமறைவாகியுள்ள பாதுகாப்பு ஊழியர்
கதவுகளை திறந்து செல்லிடத் தொலைபேசிகளை திருடுவது அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களில்
பதிவாகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment