வென்னப்புவ பொலிஸ் பிரிவில் பண்டிருப்புவ, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள தனது ஞானத் தாயின் (புழுனு ஆழுவுர்நுசு) வீட்டில் திருடிய மூன்று இலட்சம்
ரூபா பெறுமதியான நகைகளை விற்பனை செய்வதற்காக நீர்கொழும்பு நகருக்கு வந்த நபரை சந்தேகத்தின்
பேரில் சோதனை செய்த நீர்கோழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் திருடப்பட்ட
நகைகளுடன் சந்தேக நபரை நேற்று (17) கைது செய்துள்ளனர்.
பண்;டிருப்புவ, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த கயான்
பெரேரா என்ற 24 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
பண்;டிருப்புவஇ பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் சந்தேக நபரின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள சந்தேக நபரின் ஞானத்
தாய் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவு வேளையில்
பிரார்த்தனை செய்வதற்காக தேவாலயம் ஒன்றுக்கு சென்றுள்ளார். சந்தேக நபர் அவரின்
வீட்டு கூரையூடாக வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும்
3 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளார். திருடிய பணத்தை சூது விளையாடியும்இ
பெண்களுடன் உல்லாசமாக இருந்தும் செவழித்துள்ளார். திருடிய நகைகளை விற்பனை செய்வதற்காக
நீர்கொழும்புக்கு வந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால்
தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment