
கம்பஹா மாவட்ட கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவிகள் இம்முறை வெளியிடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதனை புரிந்துள்ளனர்.
இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 27 மாணவிகளில் 74 சதவீத மாணவிகள் கணிதப்பாட சித்தியுடன் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இரண்டு மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
செல்வி எம்.ஏ. பாத்திமா சஹ்ஜத், செல்வி எ. பாத்திமா ஹிஸ்கா ஆகியோரே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களாவர். செல்வி எம். ஜே. ஜெஸ்லா 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்றுள்ளார்.
படவிளக்கம் - பாடசாலை அதிபர் எஸ்.ஏ . இஸ்மத் பாத்திமா, பிரதி அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோர் சித்தியடைந்த மாணவிகள் சிலருடன் காணப்படுகின்றனர்.

No comments:
Post a Comment