சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் பயணித்து வீதியில் பயணிக்கும் பாதசாரிகளின் தங்க நகைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பாக நீர்கொழும்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பிரிவு பொலிஸார் பதிவு செய்யப்பட்ட பிரபல குற்றவாளி (IRC) ஒருவரையும் , பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணியளவில் பமுனுகம பிரதேசத்தில் தங்கச் சங்கிலி ஒன்றை பறித்துச் சென்றமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பிரதேசத்தில் உள்ள சிசிரிவி கமராக்காட்சிகளை பார்வையிட்டு வத்தளை, ஒலியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மத்தரகே சமிந்த என்பவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கட்டகளுவா என அழைக்கப்படுபவராவார்.
பொலிஸார் சந்தேக நபரை விசாரணை செய்தபோது வத்தளை நீதிமன்றில் விசாரணை செய்யப்படும் 12 வழக்குகள், தம்புள்ள மற்றும் அனுராதபுர நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படும் கப்பம் கேட்டல் தொடர்பான 3 வழக்குகள் ஆகியவற்றுடன் சந்தேக நபர் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் குற்றச் செயல்களில் ஈடுபடும் பாரிய குற்றவாளிகள் பதிவு செய்யப்படும் முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இலக்கம் வழங்கப்பட்டுள்ளவராவார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது பமுனுகம பிரதேசத்தில் தங்கச் சங்கிலி ஒன்றை பறித்துச் சென்றமை தொடர்பான சம்பவத்தில் பிரதான சந்தேக நபருடன் இணைந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான நிலவிலியம் திசாநாயக்க (49 வயது) என்பவர் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி , பமுனுகம பிரதேசத்தில் காதலர் ஒருவரிடம் கொள்ளையிடப்பட்ட தங்க பெண்டன மற்றும் சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட மேலும் பல நகைகளுடன் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்வதற்காக பமுனுகம பொலிஸாரிடம் நீர்கொழும்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பிரிவு பொலிஸார் ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment