கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு
பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர்
ஜி.ஏ.ஏ. மைக்கல் பெர்னாந்துவுக்கு பிரியாவிடை
வழங்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (24-3-2017) நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சாந்த செபஸ்த்தியன் தேவாலயத்தின்
ஜுப்லி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், நீர்கொழும்ப வலய கல்விப்
பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்
பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள், மேல் மாகாண சபை உறுப்பினர்
எம்.எஸ்.எம். சகாவுல்லா உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
படவிளக்கம்
- ஒய்வு பெற்றுச் செல்லும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் கடற்கரைத் தெரு சாந்த செபஸ்த்தியன் தேவாலய ஜுப்லி
மண்டபத்திற்கு வரவேற்று அழைத்து வரப்படுவதையும்
தேவலாயத்தில் இடம்பெற்ற விசேட சமய நிகழ்வில் பங்குபற்றுவதையும், ஆசிரிய ஆலோசகர்கள்
சார்பில் கல்விப் பணிப்பாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்புடுவதையும், நீர்கொழும்பு
கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ. மைக்கல் பெர்னாந்து நிகழ்வில் உரையாற்றுவதையும்,
பங்குபற்றியவர்களையும் படங்களில் காணலாம்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment