மாலபே
தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டத்திற்கு (SAITM) எதிர்ப்பு தெரிவித்து இன்று (24)டி நண்பகல்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ
கல்லூரி மாணவர்கள், வைத்தியர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டு மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடிவிடுமாறும், நோயாளிகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
சைட்டத்தை
தடை செய், எங்களது போராட்டம் உங்களது வாழ்க்கை, மருத்துவ பட்டத்தின் தரத்தை பாதுகாக்கவும்,
மாலபே சைட்டத்தை ரத்து செய் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment