உல்லாச
பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் வீட்டில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் உட்பட
பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய
குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் (11-4-2017) தெரிவித்தனர்.
எல்பிட்டிய,
பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பல்லே கங்கானம்லாகே சமீர அனுரங்க என்பவரே
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார். . சந்தேக நபரை பொலிஸார் நீர்கொழும்பு , கட்டுவபிட்டி,
நுகவெல வீதியில் உள்ள விகாரை முன்பாக வைத்து கைது செய்துள்ளனர்.
சம்பவம்
தொடர்பாக பொலிஸார் தெரிவித்த தகவலின் மூலமாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தேக நபருக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். சந்தேக நபர் இதற்கு முன்னர்
பிட்டிகல, எப்பாவல ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் திருடிய குற்றச்சாட்டுக்களில்
கைது செய்யப்பட்டவராவார்.
உல்லாச
பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் தளுபத்தை, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கடந்த 7 ஆம் திகதி (7-4-2017) அன்று அதிகாலை வேளையில் உட்புகுந்து சந்தேக நபர் திருடியுள்ளார்.
இரண்டு மாடிகளை கொண்ட வீட்டின் மேல் மாடி வழியாக உள் நுழைந்துள்ளார். இரண்டரை ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள அந்த வீட்டைச் சுற்றி 15 அடி உயரமான மதில் கட்டப்பட்டு மதிலில்
இரும்பு ஆணிகளைக் கொண்ட சட்டம் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த
வீட்டில் உட்புகுந்த சந்தேக நபர் அங்கு 4 மணித்தியாலங்கள் தங்கியிருந்து வீட்டிலிருந்த
நகைகள், மாணிக்கக் கற்கள், அவுஸ்திரேயிய கொரல், செல்லிடத் தொலைபேசி, கமரா ஆகியவற்றை
திருடியுள்ளார்.
அந்த
வீட்டில் சில காலங்களுக்கு முன்னர் சந்தேக
நபர் கூறை புனரமைப்பு வேலைகள் செய்துள்ளார்.
அதன் மூலம் குறித்த வீட்டில் திருடுவதற்கான வழிகளை கண்டறிந்து , சந்தேக நபர்
திருடி நகைகளை தனத இரண்டாவது மனைவி மூலமாக நீர்கொழும்பில் அமைந்துள்ள அடகு வைக்கும்
நிலையங்களில் அடகு வைத்தமை விசாரணைகளின் போது தெரிய வந்தது
நீர்கொழும்பு
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்
லலித் ரோஹனவின் வழிகாட்டலில் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ்
பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.களுவாராச்சி; சுதத்த மேற்பார்வையின் கீழ் பொலிஸ் பரிசோதகர் சுதத் குணவர்தன கொஸ்தா, கான்ஸ்டபிள்களான பிரசாத் ரத்நாயக்க, சந்தன ஹப்புவிட்ட, உதயங்க வாசல,
ரொஹான் விஜேரத்ன ஆகியோர் சந்தேக நபரை கைது
செய்துள்ளதுடன் , திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

No comments:
Post a Comment