Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, April 7, 2017

குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்த சந்தேக நபரின் பிணை மனு நிராகரிப்பு

குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்த சந்தேக நபரின் பிணை  கோரிக்கை மனு நிராகரித்த நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த  சந்தேக நபரை 18 ஆம் திகதி  வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (7) உத்தரவிட்டார்.
ஜனபத மாவத்தை, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஜி.தீப்தி ரொபின்சன் (43 வயது) என்பவரே தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபரை கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (7) மீண்டும இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை மனுவை எநிராகரித் நீதவான் சந்தேக நபரை தொடரந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு சொந்தமான ஜனபத மாவத்தை, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள வீடோன்றை பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண்னை  கடந்த  31-3-2017  அன்று பாலியல் வல்லுறவு  செய்ததாக சந்தேக நபர் மீது கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படிருந்தது.

சம்பவம் இடம் பெற்று ஒரு வார காலமே ஆகிறது. இச்சம்பவம் தொடர்பாக  நடுநிலையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படலாம் என்று கூறிய நீதவான் சந்தேக நபரின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை  மனுவை நிராகரித்து சந்தேக நபரை 18 ஆம் திகதி  வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment