Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, April 7, 2017

குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி நீதிமன்றம் முன்பாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

 நீர்கொழும்பு தளுவகொட்டுவ  பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது வீட்டில் வைத்து வல்லுறவு செய்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்குமாறு கோரியும் இன்று (7) நீர்கொழும்பு நீதிமன்றம் முன்பாக தளுவகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  சட்டத்தரணிகளே!, பெண்கள் தொடர்பாக வல்லுறவை உங்கள் சட்டத்தில் ஏற்கிறீர்களா? , ஏழைகளுக்கு சட்டத்தின் உதவி இல்லையா?, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், சொந்த வீட்டில் கூட 
  பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா? ஏன்பன போன்ற சுலோக அட்டைகளை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

 சந்தேக நபர் தொடர்பான வழக்கு முடிவடையும் வரை  அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.




No comments:

Post a Comment