Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, April 7, 2017

கிம்புலாபிட்டிய, இத்தகொடல்ல பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இரண்டு பேர் பலி.

 கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கிம்புலாபிட்டிய, இத்தகொடல்ல பிரதேசத்தில்  அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (7) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது
சம்பவம் இடம்பெற்ற சிம்போ எனப் பெயர் கொண்ட பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளரான ரன்கம்புலிகே கிரிசாந்த நிரோசன (34 வயது), தரிந்து மதுசங்க (18 வயது) ஆகியோரே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

விசில்  ஒலி எழுப்பும் வான வெடிகளை தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலையே வெடி விபத்து ஏற்பட்டு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment